🏛வயநாட்டை தொடர்ந்து 🏛அமேதியில் ராகுல் காந்தி 📜வேட்புமனு தாக்கல்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 📆15 ஆண்டுகளாக எம்பியாக இருந்து வருகிறார்😯. கடந்த 📆2014ம் ஆண்டு மக்களவைத் 🗳தேர்தலின் போது பாஜக வேட்பாளர் 👤ஸ்மிருதி இரானியை 👆ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி வென்றார்🎉. தற்போது நடக்கவுள்ள 🗳தேர்தலிலும், ராகுல்காந்தியை எதிர்த்து😡 ஸ்மிருதி இரானியே போட்டியிடுவதால்😳, அந்த தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது🙂. அத்தொகுதியில் 5வது கட்டமாக 📆மே 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ராகுல் காந்தி தனது 📜வேட்பு மனுவினை, 🏛கேரளா வயநாட்டில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று அமேதி அத்தொகுதியிலும் தாக்கல் செய்தார்👏. அப்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவருமான சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா ஆகியோர் அவருடன் இருந்தனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬