[tamil-nadu] - பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: 5-வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது...விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்ததுள்ளனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் தான் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. இதில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடி விசாரணையிலிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

ஆனால் இதுவரை சிபிஐ இந்த வழக்கை ஏற்கவில்லை. எனவே இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வழக்கு சிபிஐக்கு மாற்றிய பின்னரும் எதற்காக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும், விசாரணை எப்போது சிபிஐக்கு மாற்றப்படும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதால் இந்த வழக்கை பெண் உயர் அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டது....

போட்டோ - http://v.duta.us/TSOIqQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/V5yRKgAA