[chennai] - தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் பதவியேற்பு

  |   Chennainews

சென்னை: தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ் இன்று பதவி ஏற்றார். முதல்வர், அமைச்சர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா கொண்டுவரும் வகையில் லோக்பால் சட்டம் ஏற்கனவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை பெற்ற பிறகு, நாட்டில் 18வது மாநிலமாக தமிழக அரசும் லோக் ஆயுக்தாவை தொடங்குவதாக அறிவித்தது. கடந்த ஜூலையில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது, லோக் ஆயுக்தா குறித்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால், பலமுறை உச்சநீதிமன்றம் அவகாசம் கொடுத்தும் லோக் ஆயுக்தாவுக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் தமிழக அரசு இருந்து வந்தது. இந்நிலையில் இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம், 11ம் தேதி நடந்த விசாரணையில், 16 வார காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்பில் உறுப்பினர்களை நியமித்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த மார்ச் 13-ம் தேதி உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியை முடித்தது....

போட்டோ - http://v.duta.us/tV1PswAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/3HuEbAAA

📲 Get Chennainews on Whatsapp 💬