[tamil-nadu] - இளையான்குடி பகுதியில் கோடை மழை பெய்யாததால் விவசாய சாகுபடி பாதிப்பு

இளையான்குடி: இளையான்குடி பகுதியில் கோடை மழை பெய்யாததால் விவசாய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இளையான்குடி, சாலைக்கிராமம் ஆகிய பகுதிகளில் அதிகளவு காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அரியாண்டிபுரம், சோதுகுடி, சாத்தணி, முனைவென்றி, நடுவலசை, கொங்கம்பட்டி, சாலைக்கிராமம், வடக்கு சாலைக்கிராமம், சமுத்திரம், பிச்சங்குறிச்சி ஆகிய பகுதிகளில் கத்தரி, வெண்டை, அவரை, கீரை ஆகியவை அதிகளவு பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் மானாவாரி பகுதிகள் என்பதால், பருவமழையை நம்பியே இந்த பகுதியில் விவசாயம் செய்யப்படுகிறது. பருவமழை இல்லாத காலத்தில் ஆழ்துளை கிணற்று நீரை நம்பியே 75 சதவீத விவசாயத்தை, ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகளை விவசாயிகள் மேற்கொன்டு வந்தனர்.

இந்த ஆண்டு பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை இளையான்குடி பகுதியில் போதுமான அளவிற்கு பெய்யவில்லை. அதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுவாக கோடை காலமான மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை எப்படியும் கோடைமழை பெய்துவிடும். அதனால் காய்கறி பயிர்களான கத்தரி, வெண்டை, கீரை, உட்பட பருத்தி, வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும். ஆனால் கடந்த ஒன்றரை மாதமாக கோடை மழை பெய்யவில்லை. அதனால் அனல் காற்றும், கடுமையான வெப்பமும் நிலவுவதால் காய்கறி பயிர்களுடன், பருத்தி செடியும் கருகி வருகிறது. கோடைமழை இல்லாததால் இளையான்குடி பகுதியில் விவசாய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போட்டோ - http://v.duta.us/iDIIvQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/SIhtMQAA