[tamil-nadu] - முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு : சர்வர் பிரச்னையால் பாதியில் நிற்கும் விண்ணப்பங்கள்

சேலம்: தமிழகத்தில் முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு விண்ணப்பங்கள், சர்வர் பிரச்னைகளால் முழுமையாகாமல் இருப்பதால், பலர் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால், மீண்டும் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, எழுத்துத்தேர்விற்கான அறிவிப்பு, கடந்த 1ம் தேதி வெளியானது. தேர்வுத்தேதி அறிவிக்காத நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி முதல், கடந்த 10ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, பெரும்பாலான இடங்களில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாதபடி, சர்வர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், பலரது விண்ணப்பங்கள் பாதியிலேயே நிற்கிறது. காலஅவகாசமும் முடிந்துவிட்டதால், என்ன செய்வது என தெரியாது பலர் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முதுகலை பட்டதாரிகள் கூறியதாவது: கடந்த 2004ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று, திடீரென கணினி ஆசிரியர் பணிநியமனம் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், சுமார் 15 ஆண்டுகள் கழித்து தற்போது தான் நேரடியாக நியமனத்திற்கு எழுத்துத்தேர்வு அறிவிப்பு வெளியானது. இதனால், மாநிலம் முழுவதும் காத்திருந்த ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். ஆனால், ஆன்லைனில் விண்ணப்பம் திறந்து விடப்பட்டதில் இருந்து, ஓரிரு நாட்களை தவிர அனைத்து நாட்களிலும், பரவலாக சர்வர் பிரச்னை காணப்பட்டது. விண்ணப்பத்தை பொறுத்தவரை சுயவிவரம், கல்வித்தகுதி, புகைப்படம், கையெழுத்து மற்றும் கட்டணம் செலுத்துதல் என ஒவ்வொரு பிரிவாக கொடுக்கப்பட்டிருந்தது. இதில், ஏதேனும் ஒருபிரிவை முடித்தால், அடுத்து பிரிவு வராமலேயே, சர்வர் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. இதனால், பலரது விண்ணப்பங்கள் முழுமையாகவே இல்லை. இதனிடையே இறுதிநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பிலிருந்தே விண்ணப்பங்களை திறக்கவே முடியவில்லை....

போட்டோ - http://v.duta.us/PlDwNQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/eXiHSwAA