🏛புதுவையில் இன்று முதல் 📆4 நாட்களுக்கு 144 தடை🚫 உத்தரவு⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛புதுவை பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி 🗳இடைத்தேர்தல் வருகிற 📆18ந் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் துறை பல்வேறு நடைவடிக்கைகளை👍 எடுத்து வருகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் 🗳தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அசம்பாவிதம் எதுவும் நடக்காமல்😳 இருக்கவும், அரசியல் கட்சியினர் 💸பணம் வினியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும் 144 தடை🚫 உத்தரவு⚖ பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி 🤵அருண் கூறியுள்ளதாவது🎙, "🏛புதுவை மாநிலத்தில் இன்று மாலை ⌚6 மணி முதல் வருகிற 📆19ந் தேதி காலை ⌚6 மணி வரை 4 நாட்கள் 144 தடை🚫 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது😯. விளம்பர பதாதைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது👍" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬