🏛வேலூர் மக்களவை தொகுதி 🗳தேர்தல் ரத்து🚫 தொடர்பாக 🗳தேர்தல் ஆணையம்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛வேலூர் மக்களவை தொகுதியில் 🌞திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் 👴துரை முருகனின் மகன் 👨கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்😯. இந்நிலையில் கடந்த 📆மார்ச் 30ம் தேதி அவரது 🏡வீட்டில் 🤵வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை👀 மேற்கொண்டனர். இதில் 💸ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 📆2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் 💸ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக😱 அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது😳. இந்த சூழலில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்😐 என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு ✍கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், தற்போது இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பாக 📰செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி சரண், "🏛வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து🚫 தொடர்பாக இதுவரை உத்தரவு⚖ எதையும் பிறப்பிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬