[karur] - இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

  |   Karurnews

கரூர், ஏப். 16: கரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் , கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் மக்களவை தேர்தல் வரும் 18ம்தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகளின் படி, ஏப்ரல் 16ம்தேதி (இன்று) மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.தேர்தல் தொடர்பான பொது கூட்டங்கள், ஊர்வலங்களை நடத்தவோ, அந்த பொதுக் கூட்டங்களில் பங்கேற்கவே கூடாது. தேர்தல் தொடர்பான தகவல்களை ஒளிப்பதிவிலோ, தொலைக்காட்சியிலோ அல்லது எந்தவித மின்னணு தகவல் தொடர்பு முறையிலோ காட்சிப்படுத்தக் கூடாது.

இசை நிகழ்ச்சிகள், எந்தவித பொழுதுபோககு நிகழ்ச்சிகள் மூலமாகவோ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் 2 வருட சிறை, அபராதம் அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட, அந்த தொகுதியில் வாக்காளராக இல்லாத அனைத்து அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் 16ம்தேதி மாலை (இன்று) மாலை 6மணிக்கு மேல் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். (தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏ, தொகுதியில் வாக்காளராக இல்லாத பட்சத்திலும் வெளியேறிச் செல்ல அவசியம் இல்லை, இருப்பினும், அவர் எந்தவித பிரசாரத்திலும் ஈடுபட அனுமதியில்லை). இன்று (16ம்தேதி )மாலை 6மணிக்கு மேல் இயக்கப்படும் அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126(1)(பி)ன் படி தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளோ, வாக்கெடுப்புகளோ, கணக்கெடுப்புகளோ தேர்தல் நாளுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/azpe0gAA

📲 Get Karurnews on Whatsapp 💬