[namakkal] - உள்ளூர் தொலைக்காட்சிகளில் இன்று மாலை முதல் தேர்தல் விளம்பரங்கள் ஒளிபரப்ப தடை

  |   Namakkalnews

நாமக்கல், ஏப்.16: காட்சி ஊடகங்களில் விளம்பரம் செய்ய இன்று மாலையுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஆசியாமரியம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில், எல்இடி வாகனம், செயற்கை கோள் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள் மூலமும், அச்சு ஊடகங்கள் மூலமும் வெளியிடப்படும் விளம்பரங்கள், இக்குழுவிடம் சான்று பெற்ற பின்னரே வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளை மறுநாள் (18ம் தேதி) தேர்தல் நடப்பதையொட்டி, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான 17ம் தேதி மற்றும் வாக்குப்பதிவு நாளான 18ம் தேதி ஆகிய 2 நாட்கள், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அல்லது பிற அமைப்புகள் அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன்கூட்டியே விண்ணப்பம் செய்து அனுமதி பெற்று விளம்பரங்களை வெளியிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார். மேலும், காட்சி ஊடகங்களான எல்இடி வாகனம், உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், 16ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு மேல் ஒளிபரப்பக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/eL9CmQAA

📲 Get Namakkalnews on Whatsapp 💬