[namakkal] - தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கேரளா சிறப்பு காவல்படையினர் நாமக்கல் வருகை

  |   Namakkalnews

நாமக்கல், ஏப்.16: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,626 வாக்குச்சாவடிகள் உள்ளது. இவற்றில் 187 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணிக்க 121 நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக கேரள மாநிலத்தின் சிறப்பு காவல் படையை சேர்ந்த 160 வீரர்கள் நாமக்கல் வந்தனர். இவர்கள், ஆந்திர மாநில தேர்தல் பணியை முடித்துக் கொண்டு அங்கிருந்து ரயில் மூலம் புறப்பட்டு, நேற்று காலை 10 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்தடைந்தனர். நாமக்கல் மாவட்ட எஸ்பி அருரளசு உத்தரவின்பேரில், போலீஸ் பஸ்சில் நாமக்கல் அழைத்து வரப்பட்டனர். இதில், 80 சிறப்பு காவல் படை வீரர்கள் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் ராசிபுரம் சட்டமன்ற தொதிக்கு அனுப்பப்பட உள்ளனர். சிறப்பு காவல் படைகளின் முக்கிய அதிகாரிகளிடம் நாமக்கல் மாவட்ட எஸ்பி அருரளசு ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 2ம் கட்டமாக நாளை 16ம் தேதி கேரள மாநிலத்தின் சிறப்பு காவல் படையை சேர்ந்த வீரர்கள் நாமக்கல் வர உள்ளனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/zfaE-QAA

📲 Get Namakkalnews on Whatsapp 💬