[perambalur] - மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு

  |   Perambalurnews

ஜெயங்கொண்டம், ஏப். 16: ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் பகுதி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் முக்கிய வீதிகள் வழியாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மக்களவை தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிமடம் பகுதி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பை துவக்கி வைத்து அரியலூர் எஸ்பி சீனிவாசன் பேசியதாவது:ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆண்டிமடம் பகுதியில் 117 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் நாகம்பந்தல், பெரியகிருஷ்ணாபுரம், சிலம்பூர், அழகாபுரம், விளந்தை (மேற்கு, கிழக்கு) 6 மையங்கள் பதற்றமானவை என கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் இந்தோ திபெத் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், திருச்சி முதல் பட்டாலியன்கள் என 250க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். ேமலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது என்றார்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/BSZfBQAA

📲 Get Perambalurnews on Whatsapp 💬