[perambalur] - வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு

  |   Perambalurnews

பெரம்பலூர், ஏப். 16: பெரம்பலூர் மக்களவை தொகுதியில் உள்ள 1,644 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டு வரப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் 2 அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், கல்லூரி வளாகத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதில் தமிழகம், புதுவை மாநிலங்களுக்கு 2ம் கட்டமாக ஏப்ரல் 18ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதியும் நடத்தப்படுகிறது. இதன்படி பெரம்பலூர் மக்களவை தொகுதியில் உள்ள பெரம்பலூர் (தனி), துறையூர் (தனி), லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,644 வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவுக்கு பிறகு கொண்டு வரப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மே 23ம் தேதி நடத்தப்படும் வாக்கு எண்ணிக்கைக்காக பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் ஆகியவற்றில் அமைத்துள்ள 2 ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படவுள்ளது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/6yg-KQAA

📲 Get Perambalurnews on Whatsapp 💬