[pudukkottai] - க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தில் கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வாக்கு சேகரிப்பு

  |   Pudukkottainews

க.பரமத்தி, ஏப்.16: க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தில் கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர்விஜயபாஸ்கர் நேற்று வாக்குகள் சேகரித்தனர். க.பரமத்தி தெற்கு ஒன்றிய பகுதிகளான தும்பிவாடி, ஆரியூர், நடந்தை, தென்னிலை, கோடந்தூர், கூடலூர்மேற்கு, கூடலூர்கிழக்கு, சின்னதாராபுரம், தொக்குப்பட்டி, ராஜபுரம், நஞ்சைகாளகுறிச்சி, புஞ்சைகாளகுறிச்சி, எலவனூர் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் நேற்று மாவட்ட அதிமுக செயலாளரும் தமிழக போக்குவரத்துறை அமைச்சருமான எம்ஆர்விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசினார்.

கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பேசுகையில், கடந்த முறை மக்கள் குறை கேட்டு நான் வந்த போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு 3மாதங்களாக கூலி கிடைக்கவில்லை எனவும் காவிரி குடிநீர் குடியிருப்பிற்கு ஏற்ப வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தீர்கள் அதற்கு ஒரே வாரத்தில் 100வேலை பணியாளர்களுக்கு உரிய கூலி அவரவர் வங்கி கணக்கிற்கு உடனே கிடைக்க வழி செய்யப்பட்டது. அத்தோடு காவிரி குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.220கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் க.பரமத்தி ஒன்றித்தில் உள்ள குக்கிராமங்களில் குடிநீர் தேவை 6மாதத்தில் பூர்த்தியாகிவிடும். இது போல மக்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வரும் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்றார்.பிரசாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/qFgrygAA

📲 Get Pudukkottainews on Whatsapp 💬