[tamil-nadu] - ஆண்டிபட்டி பகுதியில் வறட்சியால் கருகும் தக்காளி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி வறட்சியின் காரணமாக கருகியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆண்டிபட்டி பகுதியில் ராமகிருஷ்ணபுரம், ஜக்கம்மாள்பட்டி, கதிர்நரசிங்கபுரம், சித்தார்பட்டி, வண்டியூர், பாலக்கோம்பை, இராஜதானி, ஜி.உசிலம்பட்டி புலிமான்கோம்பை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி, கத்தரி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட காய்கனி வகைகளையும், மரிக்கொழுந்து, செவ்வந்தி, மல்லிகை, ரோஜா போன்ற பூ வகைகளை சாகுபடி செய்துள்ளனர்.

இதற்கு முறையாக களை எடுத்தல், உரம் வைத்தல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட உழவாடை பணிகள் செய்தனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக இப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் சிறப்பு குறைந்து விட்டது. மேலும் பங்குனி மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு போதிய தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் வறட்சியின் காரணமாக கருகி வருகிறது....

போட்டோ - http://v.duta.us/WnFlIAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/X4lcPAAA