[theni] - போடியில் வாக்குக்காக பணம் விநியோகித்த அதிமுக பெண் மீது வழக்கு

  |   Theninews

தேனி, ஏப். 16: போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் தேனி மக்களவை ெதாகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார். தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பலகட்டங்களாக பணம் கொடுத்து வருகின்றனர். தற்போது தேர்தல் பிரசார இறுதி கட்டத்தை எட்டியதையடுத்து, வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் படி பணம் கொடுக்கும் படலத்தை அதிமுகவினர் துவக்கி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் நேற்று முதல் அதிமுகவினர் வீடு, வீடாக சென்று, வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கினர். இதில் சில இடங்களில் பணம் பெற்ற அதிமுகவினர் பணத்தை பிடித்துக்கொண்டு வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 மட்டும் வழங்கினர். இதனால், வாக்காளர்கள் அதிமுகவினரிடம் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் தருவார்கள் என்றார்களே நீங்கள் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டீர்களா எனக் கேட்டு பிரச்சனை செய்யத் துவங்கியுள்ளனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/ah-MyAAA

📲 Get Theninews on Whatsapp 💬