[thiruvarur] - மன்னார்குடி பகுதியில் வீதிவீதியாக தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

  |   Thiruvarurnews

மன்னார்குடி, ஏப். 16: மன்னார்குடி பகுதியில் வீதிவீதியாக சென்று தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார. இந்நிலையில் மன்னார்குடி நகரத்தில் உள்ள 33 வார்டுகளிலும் தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் வீடுவீடாக சென்று பழனிமாணிக்கம் வாக்கு சேகரித்தார். முன்னதாக மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் அருகில் பிரசார துவக்க விழா நடந்தது. பின்னர் பெரியார் சிலை அருகில் நடந்த பிரசார கூட்டத்தில் வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசுகையில், கஜா புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாய் நின்றபோது அவர்களின் துயரை துடைக்க முன்வராத கூவத்தூர் அடிமை அரசும், மத்திய பாசிச அரசும் இன்று கூட்டணி என்ற போர்வையில் வாக்கு சேகரிக்க வருகின்றனர்.

இவர்களை நம்ப மக்கள் தயாரில்லை. சரியான பாடத்தை தேர்தலில் கற்று கொடுப்பர். காவிரி டெல்டா பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க பாடுபடுவேன். எனவே தமிழகமும், இந்தியாவும் புதிய பாதையை நோக்கி செல்ல கருணாநிதியின் எண்ணம் ஈடேற மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வாக்காளர்களாகிய நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து மகத்தான வெற்றியை தேடித்தர வேண்டும் என்றார். ஆறுதல் கூறிய பழனிமாணிக்கம் ஒரத்தநாடு தென்னமநாட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). இவர் கடந்த 13ம் தேதி ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று தென்னமநாட்டில் உள்ள கோவிந்தராஜின் இல்லத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது உங்களுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும் என்று பழனிமாணிக்கம் தெரிவித்தார். ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் காந்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/mePM0gAA

📲 Get Thiruvarurnews on Whatsapp 💬