[tiruchirappalli] - பாஜக வீட்டுக்கு போனால் தான் வாழ முடியும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ரயில்வே அப்ரன்டீஸ் சங்கம் ஆதரவு

  |   Tiruchirappallinews

திருச்சி, ஏப்.16: தெற்கு ரயில்வே அப்ரன்டீஸ் சங்கம் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.திருச்சியில் ரயில்வே அப்ரன்டீஸ் ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய ரீகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் அப்ரன்டீஸ் மாணவர்களின் கோரிக்கை குறித்து பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. எங்கள் பிரச்னை குறித்து 100 எம்பியிடம் கடிதம் கொடுத்துள்ளோம். இதுவரை எதுவும் செய்ததில்லை. நாடு முழுவதும் அப்ரன்டீஸ் முடித்து ரயில்வேயில் பணியாற்றும் 25 ஆயிரம் குடும்பம் உள்ளது. குரூப்-டி என ஒரு தேர்வு வைத்து 20 சதவீதம் கோட்டா கொடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை பறித்துக் கொண்டது.பாஜ அரசு வீட்டுக்கு போனால் மட்டும் தான் மக்களால் வாழ முடியும். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மத்திய அரசில் மறுக்கப்படுகிறது. மெஜாரிட்டியாக அமர்ந்து எங்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டனர். திமுக கூட்டணிக்கு எங்கள் ஆதரவு கொடுத்துள்ளோம். தமிழகத்தில் 13,750 குடும்பத்தினர் உள்ளனர். அவர்கள் அனைவரும் திமுக கூட்டணியினருக்கு தான் வாக்களிப்பர். பொன்மலையில் அப்ரன்டீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1,275 பேரில் 1,200 பேர் வடமாநிலத்தவர். இவர்கள் அனைவரும் மபி, உபியிலிருந்து தான் வந்துள்ளனர். 2 ஆண்டு பயிற்சியில் தான் வருகின்றனர். போலீஸ் என்ஓசிக்கூட அவர்களிடம் தமிழக அரசு வாங்க மறுக்கின்றது. தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் வெளி மாநிலத்தவர் பங்குபெறலாம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரம் போகும். தமிழகத்தில் மட்டும் தான் இந்த சட்டம் அமலில் உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் இச்சட்டத்தை ரத்து செய்ய முடியும். அதற்கு திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் நடக்கும் என்றார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/8x-MhgAA

📲 Get Tiruchirappallinews on Whatsapp 💬