[tiruchirappalli] - முசிறி பகுதியில் அரசு பாய்மில் தொழிற்சாலை அமைக்க பாடுபடுவேன்

  |   Tiruchirappallinews

தா.பேட்டை, ஏப்.16: முசிறி பகுதியில் அரசு பாய்மில் தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்பினை பெருக்குவேன் என்று ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் கூறினார். பெரம்பலூர் மக்களவை தொகுதி திமுக கூட்டணியின் ஐஜேகே வேட்பாளரான பாரிவேந்தர் முசிறி பகுதியில் நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். முசிறி தாலுகா உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், வெள்ளூர், ஆணைப்பட்டி, வடுகப்பட்டி, புதிய பேருந்து நிலையம், ஆலமரத்துப்பட்டி, மலையப்பபுரம், பரிசல்துறைரோடு, வேளாகநத்தம், துறையூர் ரோடு, கைகாட்டி, உள்ளிட்ட முசிறி நகரின் முக்கிய வீதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முசிறி தாலுகாவில் வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண பாடுபடுவேன். காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும். விவசாய விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படும், கோரைப்பாய் உற்பத்தியை பெரிதும் நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு முசிறியில் கோரைப்பாய் தொழிற்சாலை அரசு சார்பில் அமையவும். இப்பகுதியில் தயாராகும் கோரைப்பாய்களை ஏற்றுமதி வணிகத்திற்கு திட்டங்கள் கொண்டுவரப்படும்.

காவிரி கரையோரங்களில் பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை மத்திய அரசு நிதியோடு செயல்படுத்துவேன். முசிறி பகுதியில் மகளிர் தொழில்நுட்ப கல்லூரி கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். கிராமபுற பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு அரசின் மூலம் வட்டியில்லா கடன் கிடைத்திட பாடுபடுவேன். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இப்பகுதியில் நிறுவுவதற்கு முயற்சி மேற்கொள்வேன் என்று பேசினார். வடுகப்பட்டி பகுதியில் பாய் உற்பத்தி தொழிலாளர்கள் மத்தியில் வேட்பாளர் பாரிவேந்தர் ஆதரவு கேட்டு பேசினார். திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/HRHtqgAA

📲 Get Tiruchirappallinews on Whatsapp 💬