[tiruvallur] - தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக குண்டூர் - தெனாலி இடையே ரயில் சேவையில் மாற்றம்

  |   Tiruvallurnews

சென்னை, ஏப். 16: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக குண்டூர் - தெனாலி இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:குண்டூர் - தெனாலி இடையே நடைபெறும் தண்டவாள பணி காரணமாக ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படும். அதன்படி ஐதராபாத்- சென்னை சென்ட்ரல் ரயில் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை குண்டூர், கிருஷ்ணா கல்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும்.ஐதராபாத் - திருவனந்தபுரம் சபரி விரைவு ரயில் 21ம் தேதி முதல் 24 ம் தேதி வரை குண்டூர், கிருஷ்ணா கல்வாய் வழியாக இயக்கப்படும். செங்கல்பட்டு - காக்கிநாடா விரைவு ரயில் 21 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை கிருஷ்ணா கல்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும்.

சென்ட்ரல் - லக்னோ விரைவு ரயில் 23 ம் தேதி மற்றும் 23ம் தேதி கிருஷ்ணா கல்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும். விஜயவாடா - சென்ட்ரல் ஜன்சதாப்தி விரைவு ரயில் 21 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை கிருஷ்ணா கல்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும். ஐதராபாத் - எர்ணாகுளம் விரைவு ரயில் 24ம் தேதி செகந்திராபாத், கசிபேட், விஜயவாடா, தெனாலி வழியாக இயக்கப்படும். சென்ட்ரல் - மாதா விஷ்ணு தேவி காத்ரா அந்தமான் விரைவு ரயில் 21 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை தெனாலி , கிருஷ்ணா கல்வாய் வழியாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/DRAljwAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬