🇮🇳இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்👍-3 பாகிஸ்தான் 👮வீரர்கள் பலி😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
🏔காஷ்மீரில் கடந்த 📆பிப்ரவரி 14ம் தேதி 👮சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற 🚌பேருந்து மீது 💣வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இதில் 40 வீரர்கள் இறந்தனர்😟. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது😳. இதனை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு😨தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில்😱, பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 👮வீரர் ஒருவரும், எல்லையோர கிராமத்தில் வசித்து வந்த 👧5 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தனர்😟. இதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது👍. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 👥3 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ராணுவத்தின் ஊடகப்📺 பிரிவு தெரிவித்துள்ளது. 🇮🇳இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் உயிரிழப்புகளும், சேதமும் அதிகமாக இருக்கும் என்றும்😯, ஆனால் பாகிஸ்தான் தரப்பு உண்மையை மறைப்பதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬