🙅எதிர்ப்புகளைத் தாண்டி 'ரஃபேல் ஊழல் விவகார 📙புத்தகம்' வெளியானது

  |   செய்திகள்

பிரான்ஸ் உடனான ரபேல் ✍ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக மத்திய பாஜக 🏛அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், "🇮🇳நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" என்ற பெயரில் 📙புத்தகம் ஒன்றை இன்று மாலை வெளியிடுவதாக பாரதி புத்தகாலயம் 📣அறிவித்திருந்தது. திடீரென்று, 🗳தேர்தல் நடத்தை விதி மீறல் என்று காரணம் காட்டி, அச்சடிக்கப்பட்ட புத்தகங்களைத் தேர்தல் பறக்கும் 👮படையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் 💺ஆணையர் சத்ய பிரதா சாஹூ புத்தகத்தை தேர்தல் ஆணையம் தடை 🙅செய்யவில்லை என்று கூறினார். இதனையடுத்து, சென்னை தேனாப்பேட்டையிலுள்ள பாரதி புத்தகாலயம் 🏢அலுவலகத்தில் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ 📙புத்தகம் வெளியீட்டு 🎊விழா நடைபெற்றது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬