காங்கிரஸ் 🗳தேர்தல் அறிக்கை📜-அதிரடியான வாக்குறுதிகள்🗣

✍இளவேனில்🌄

🏛டெல்லி, அக்பர் சாலையில் உள்ள கட்சித் தலைமை 🏢அலுவலகத்தில் நடைபெறும் 👥கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 🗳தேர்தல் அறிக்கையை சற்றுமுன்னர் வெளியிட்டார்🎉. இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது🎙, "தேர்தல் அறிக்கையில்📜 ஒரு வாக்குறுதி🗣 கூட பொய்யாக இருக்க கூடாது🚫 என்பதே எங்களின் நோக்கம்😐. தேர்தல் அறிக்கையானது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருப்பது🙂 மிக மிக அவசியம். காங்கிரஸ் 🗳தேர்தல் அறிக்கையில் 5 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன😯. இந்த அறிக்கையில், ஏழைக்களுக்கான குறைந்த பட்ச வருவாய் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது👍" என்று கூறினார். அறிக்கையின்📜 விவரங்கள் இதோ👇

🔰நியாய் திட்டத்தின் கீழ் ஏழைக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000. இந்த தொகையானது குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
🔰விவசாயத்திற்கு தனி பட்ஜெட் நிச்சயம்.
🔰2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வறுமை நிச்சயம் ஒழிப்பு.
🔰விவசாயிகள் அவர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
🔰தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து. தமிழகத்தில் மட்டுமில்லை எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்க்கப்படுகிறதோ அந்த மாநிலங்களில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்தல் நடத்தப்படும்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬