🌊சிந்து நதியின் மேல் 📆40 நாட்களில் 260 அடி நீள தொங்கு பாலம்👏

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏔ஜம்மு காஷ்மீரின் லே என்ற இடத்தில் உள்ள சோக்லம்ஸர் கிராமத்தில் 🌊சிந்து நதியின் மேல் 📆40 நாட்களில் சுமார் 260 அடி நீளம் கொண்ட தொங்கு பாலத்தினை 🇮🇳இந்திய ராணுவத்தின் ஃபயர் அன்ட் ஃப்யூரி பிரிவினர் அமைத்து சாதனை🎉 படைத்துள்ளனர். புதுமையான பொறியியல் முறைகள் மூலம், 500 டன் உபகரணங்கள் மற்றும் 🏗கட்டுமான பொருட்கள் கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், இந்த பாலம், நடுவில் தூண்கள் ஏதுமின்றி கட்டப்பட்டுள்ளது😳 குறுப்பிடத்தக்கது. லே-லடாக் பிராந்தியத்தில் உள்ள 👥பொதுமக்களுக்கும் 👮ராணுவத்திற்கும் இடையே உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பாலத்திற்கு மைதிரி பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது👍. பொதுமக்களுக்கு ராணுவத்தினர் அர்ப்பணித்த🙂 இப்பாலத்தினை 89 வயதான ஓய்வு பெற்ற போர் வீரர் 🤵நெயிக் ஃபுங்சுக் ஆங்டஸ் திறந்து வைத்தார்👏.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬