🗳தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் ஏழை 👥மக்களுக்கான 💺ஆட்சி அமையும்👍-தூத்துக்குடியில் அமித்ஷா🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இன்று தமிழகம் வந்த 👴அமித்ஷா 🏛தூத்துக்குடி மக்களவை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பிரச்சாரம்🗣 மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்🎙, "மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்🙂. பாரதிய ஜனதா வெற்றி🎉 பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் கடந்த 📆5 ஆண்டுகளை போல வரும் 5 ஆண்டுகளிலும் ஏழைகளுக்கான 💺ஆட்சியாக மோடி அரசு இருக்கும்👍" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்🎙, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இருவரது 👥குடும்பங்களுக்கு இரங்கல்😟 தெரிவித்தார். பின்னர் "👩தமிழிசை சவுந்தரராஜனுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை பாகிஸ்தானின் 🛩போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய 👨அபிநந்தனை நினைத்து இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறேன்🗣. தமிழகத்திற்கு அதிக 💸நிதியை பாரதிய ஜனதா அரசு ஒதுக்கியுள்ளது😯. தென் மாநிலங்களை பாரதிய ஜனதா ஒருபோதும் கவனிக்காமல் விட்டதில்லை😌. ஆனால் தமிழகத்திற்கு காங்கிரஸ் போதிய நிதியை ஒதுக்கவில்லை🚫. பாரதிய ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு மேலும் அதிக 💸நிதி ஒதுக்கப்படும்👍" என்று கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬