மோடிக்கு ஆதரவாக பேசிய🗣 ராஜஸ்தான் 💺ஆளுநர் மீது 🗳தேர்தல் ஆணையம் புகார்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛ராஜஸ்தான் மாநில ஆளுநரான 💺கல்யாண் சிங், பாஜக கட்சியின் 🏛உத்தரபிரதேச மாநில முன்னாள் 💺முதல்வர். இவர், கடந்த 📆23ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் 📰செய்தியாளர்களை சந்தித்த போது, ‘ஒவ்வொருவரும் பிரதமர் மோடியே மீண்டும் தேர்தலில் வெற்றி🎉பெற வேண்டும் என்று அனைவரும் கருதுகின்றனர். அதுவே நாட்டிற்கு தேவை என்றும் விரும்புகின்றனர்’ என்று தெரிவித்தார். ஆளுநராக பணியில் உள்ள கல்யாண் சிங், 🗳தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை😳 கிளப்பியது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது😯. அதைதொடர்ந்து, உத்தரபிரதேச மாநில தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையம் உண்மை அறிக்கை கேட்டு 📜நோட்டீஸ் அனுப்பியது. அதனையடுத்து, ஆளுநர் பேசிய🗣 விபரங்கள் குறித்து 📹வீடியோ, ஆடியோ விபரங்களை 🏛மாநில தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு👀 செய்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது. இதனையடுத்து, 🏛அரசு உயர் பதவி வகிக்கும் கவர்னர் இவ்வாறு பேசுவது தேர்தல் விதிமுறை மீறலாகும்🙄 என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது😓. மேலும் ஆளுநர் கல்யாண் சிங் குறித்து ஜனாதிபதிக்கும் புகார் 📄கடிதம் ✍எழுதியுள்ளது. இது பெரும் சர்ச்சையை😨 ஏற்படுத்தியுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬