💉மருத்துவ 📚மேற்படிப்புக்கான கலந்தாய்வு முடிவுகளை வெளியி்ட தடை🚫

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

முதுநிலை 💉மருத்துவப் 📚படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி🎉 வரும் 📆4ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று தொடங்கிய கலந்தாய்வில் முதலாவதாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன😯. அதைத் தொடர்ந்து தரவரிசைப் 📜பட்டியலின்படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ✍தேர்வுக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🏛தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் 🏢கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு ✍நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் 💻இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 📆11ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. அதன் மூலம் 👥11,650 பேர் விண்ணப்பித்திருந்ததாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்தது. அவை பரிசீலிக்கப்பட்டு, ஊரகப் பகுதிகளில் சேவையாற்றிய அரசு 🤵டாக்டர்களுக்கு மட்டும் நீட் 🔢மதிப்பெண்ணுடன் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது😳. இதனால் மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க கோரி🙏 பொதுநல வழக்கு தொடரப்பட்டதில், மருத்துவ மேற்படிக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவ 🤵அதிகாரிகளுக்கு கூடுதலாக 10% மதிப்பெண் வழங்க எதிர்ப்பு🚫 தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு🗣 வந்த நிலையில், மருத்துவப் மேற்படிப்புக்காக கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை🚫 விதித்து 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬