🏭ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக நாடகம் போடுகிறது😳-💺முதல்வர் ஆவேசம்😡

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛தூத்துக்குடியில் அ.தி.மு.க.-பாஜக 🤝கூட்டணி சார்பில் இன்று மாலை சங்கரபேரி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதலமைச்சர் 💺பழனிசாமி பேசுகையில்🎙, "தூத்துக்குடி 🏭ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய நிலம் கொடுத்தது 🌞தி.மு.க., அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்தவர் ஸ்டாலின். ஸ்டெர்லைட் விவகாரத்தில் 🌱அ.தி.மு.க. மீது பழிபோடுவது எந்த விதத்தில் நியாயம்⁉நமக்கு திரளும் 👥கூட்டத்தை கண்டு ஸ்டாலின் மிரண்டு😨 போயிருக்கிறார். 🏭ஸ்டெர்லைட் விவகாரத்தில் 🌞திமுக போடுவது நாடகம். மக்களை ஏமாற்றுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட🔒 நடவடிக்கை எடுத்தது 🌱அ.தி.மு.க. 💺அரசு தான்" என்று 😡ஆவேசமாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "மக்களுக்கு சேவை செய்ய மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளோம். 💪வலிமையான தலைமை, வலிமையான 💺ஆட்சியை தரக் கூடியவர் பிரதமர் மோடி" என்றும், "🏛தமிழகத்தில் வீணாக செல்லும் 🌊தண்ணீரை தேக்க, தடுப்பணை🏗 அமைக்க திட்டம் தயார் செய்துள்ளோம்👍" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬