[chennai] - தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் - கவிஞர் வைரமுத்து இரங்கல்

  |   Chennainews

சென்னை; பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்த இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். மகேந்திரனின் மறைவு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்திற்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர்.

எனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்கமுடியாத ஓர் உறவுண்டு. திரையுலகில் பாரதிராஜாவுக்கு நான் எழுதிய முதல் பாட்டு ‘பொன்மாலைப் பொழுது’ என்றாலும் நான் பாட்டெழுதி முதலில் வெளிவந்த படம் ‘காளி’. அந்தப் படத்தின் கதாசிரியராய் இருந்த மகேந்திரன்தான் அந்தப் பாடலின் கதைச் சூழலைச் சொல்லி என்னை எழுத வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்....

போட்டோ - http://v.duta.us/8zcfDgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/Bl9jMQAA

📲 Get Chennainews on Whatsapp 💬