[chennai] - நாட்டையே உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை!

  |   Chennainews

சென்னை: நாட்டையே உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஃப்ரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான புத்தகம் நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. விஜயன் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் இன்று மாலை வெளியிடப்பட இருந்தது. முன்னதாக, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் அருகில் கேரள சமாஜத்தில் இன்று மாலை 6 மணிக்கு புத்தக வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு அனுமதி கிடைக்காத காரணத்தினால், தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் வெளியீட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய சமூக விஞ்ஞானக் கழகத் தலைவர் வீ.பா.கணேசன் புத்தகத்தை வெளியிட, இந்து குழும தலைவர் என்.ராம் நூல் வெளியீட்டு சிறப்புரையாற்றவிருந்தார். அ.குமரசேன், இயக்குனர் ராஜூ முருகன், பத்திரிகையாளர் ஜெயராணி, புத்தகத்தைப் பதிப்பித்துள்ள பாரதி புத்தகாலயம் நாகராஜ் ஆகியோரும் இவ்விழாவில் உரையாற்றவிருந்தனர். இந்தநிலையில், பூந்தல்லியில் இருந்து தேனாம்பேட்டை புத்தக கடைக்கு கொண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரபேல் புத்தகங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், புத்தகத்தை வெளியிட, ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி எஸ்.கணேஷ் தடை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், புத்தகத்தை மீறி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

போட்டோ - http://v.duta.us/JyIfTAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/zafZ7AAA

📲 Get Chennainews on Whatsapp 💬