[coimbatore] - உழைக்கும் மக்களின் உண்மை கதையை எடுத்து கூறும் - மேற்குத்தொடர்ச்சி மலை

  |   Coimbatorenews

சுமைதூக்கிகளாக மலைக்கும் அடிவாரத்திற்கும் வந்து போகும் மக்களின் வாழ்க்கையை துல்லியமாகவும், நுட்பமாகவும், பாசாங்கு இல்லாமலும் பதிவு செய்துள்ள படம் 'மேற்குத்தொடர்ச்சி மலை'.

கதை, கதாபாத்திரத் தேர்வு, பாத்திர வார்ப்பு, திரைக்கதை என ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்துச் சொல்ல முடியாத அளவுக்கு அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்தும் இணைந்தும் கிடப்பதே படத்தின் ஆகச் சிறந்த பலம். படத்தில் நாயகன் இருக்கிறார். அதற்காக அவரை மையமாகக் கொண்டு மட்டுமே படம் நகரவில்லை. கதை மட்டும் அல்ல, நிறைய கதைகள் படத்தில் உள்ளன.

ஏலக்காய் மூட்டையை தலையிலும், தோளிலும் சுமந்தபடி மலையிலிருந்து அடிவாரப் பகுதிக்கு கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்கிறார் ரங்கசாமி (ஆண்டனி). காணி நிலத்தையாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காக ஓய்வில்லாமல் உழைக்கிறார். நிலம் வாங்கிய பிறகுதான் திருமணம் என்று வைராக்கியத்துடன் வாழும் ரங்கசாமியை அதிகாரமும் அரசியலும் சதி செய்து சிறைக்குள் தள்ளுகிறது. தான் வாங்கிய நிலத்துக்கே காவலாளியாக வேலை பார்க்கும் கொடூர சூழலுக்குத் தள்ளி வேடிக்கை பார்க்கிறது காலம். இது ஏன் நிகழ்கிறது, ரங்கசாமி கனவு தகர்ந்து போக யார் காரணம், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் எப்படிப் பறிபோகிறது போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை....

போட்டோ - http://v.duta.us/P0YogQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/AgOjSAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬