[coimbatore] - கோவையில் 1000 ஆண்டுகள் பழமையான பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில்

  |   Coimbatorenews

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கிருந்து குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

ஆலய தரிசனம் :

இந்த திருக்கோவிலை அடைந்ததும் நம்மை ஆலய கோபுரம் வரவேற்கிறது. கோபுர தரிசனம் முடித்து கோவிலுக்குள் செல்கிறோம். கருவறையில் காட்சி தரும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாளை இங்கிருந்தே தரிசிக்கலாம். கோவில் முன் மண்டபத்தில் தென்புறத்தில் சக்கரத்தாழ்வாரும், வலதுபுறத்தில் தன்வந்திரி பகவானும் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர். அவர்களை தரிசித்து விட்டு அர்த்த மண்டபத்திற்குள் நுழை கிறோம். அர்த்த மண்டபத்தின் நுழைவு வாயிலில் அருகே துவாரபாலகர்களான ஜெயன் தென்புறமும், வடபுறம் விஜயனும் எழுந்தருளி உள்ளனர். அவர்களின் அனுமதி பெற்று அர்த்த மண்டபத்திற்குள் உள்ளே செல்கிறோம்.

நின்ற கோலத்தில் பெருமாள் :

அங்கே.. அலங்கார பிரியரான எம்பெருமாள் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி உடன் கேசவபெருமாளாக எழுந்தருளி உள்ளார். அவரது திவ்ய தரிசனத்தை பெற்று கொண்டு கருவறையில் காட்சி தரும் மூலவர் கரிவரதராஜபெருமாளை தரிசிக்கலாம். நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். சங்கு, சக்கரம், அபய கஸ்தம், சுதையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அவரது வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமானுடன் பக்தர் களுக்கு சேவை சாத்தி அருளுகின்றார்கள். இங்கு பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன....

போட்டோ - http://v.duta.us/khVKtgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/sCehMQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬