[coimbatore] - ஜிமெயிலில் மேம்பட்ட புதிய அம்சங்கள்

  |   Coimbatorenews

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் மேம்பட்ட ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. #Gmail

கூகுளின் ஜிமெயில் சேவை துவங்கி 15 ஆண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜிமெயில் சேவையின் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் முன்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் மின்னஞ்சலை பின்னர் அனுப்ப ஷெட்யூல் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் பயனரின் எழுத்து முறைகளை கற்றுக் கொண்டு, மின்னஞ்சல்களை எழுதும் போது அவர்களுக்கு ஏற்றவாரு பரிந்துரைகளை வழங்கும் என கூகுள் அறிவித்துள்ளது. இவற்றுடன் ஜிமெயில் தளத்தை விட்டு வெளியேறாமல் சில அம்சங்களை இயக்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜிமெயில் தளத்தின் புதிய அம்சங்களில் மின்னஞ்சலை ஷெட்யூல் வசதி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு பயனர் விரும்பும் நேரத்தில் மின்னஞ்சல்களை அனுப்ப முடியும். இதனை பயன்படுத்த மின்னஞ்சலை டைப் செய்து சென்ட் பட்டனை க்ளிக் செய்து மின்னஞ்சல் செல்ல வேண்டிய நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்....

போட்டோ - http://v.duta.us/GJDWsAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/BW5nUQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬