[tamil-nadu] - அதிகாரிகள் மெத்தனத்தால் மலைச்சாலை பாலப்பணி பின்னடைவு : தோட்டத்தொழிலாளர்கள் அவதி

அம்பை: வனத்துறை உறுதியளித்ததுபோல் மாஞ்சோலை மலைச்சாலை பாலப்பணிகளை முடிக்காமல் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடையம் முதல் திருக்குறுங்குடி வரை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அம்பை புலிகள் காப்பகம் மணிமுத்தாறு மலை பிரதேசத்தில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி உள்ளிட்ட பகுதியில் 8373 ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் உள்ளன.

இங்கு ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு தேவைகளுக்காகவும், இவர்களது குழந்தைகள் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிமித்தமாகவும் அம்பை, வி.கே.புரம், நெல்லை போன்ற பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வசதியாக பாபநாசம் அரசு போக்குவரத்து கழகம் சிற்றூந்துகளை இயக்கி வருகிறது. காக்காச்சி நாலுமுக்கு மலைச்சாலையின் குறுக்கே செல்லும் காட்டாற்றை கடக்க வேறு மாற்றுப்பாதை இல்லாத நிலையில் எஸ்டேட் நிர்வாகம் 1942ம் ஆண்டு அக்.21ம் தேதி மரப்பாலம் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சென்று வந்தன....

போட்டோ - http://v.duta.us/rOkIYgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/_5G7bgAA