[tamil-nadu] - இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மாயமான புளியங்குடி தம்பதி டெல்லியில் வசிப்பது அம்பலம்: போனில் பேசியதால் பெற்றோர் ஆனந்தகண்ணீர்

புளியங்குடி: புளியங்குடி தென்வடல் தெரு ஜின்னா நகரைச் சேர்ந்த சிக்கந்தர் மகன் காஜாமைதீன் (37). எம்பிஏ முடித்து விட்டு, சென்னையில் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்தார். இவரது மனைவி தஹ்ரித் நிஷா (24). இவர்களது திருமணம் 2014ம் ஆண்டு ஜூலையில் நடந்தது. ஹானிஷ் அகமது (4) என்ற மகன் உள்ளான். 2016ம் ஆண்டு சென்னைக்கு மனைவி மற்றும் குழந்தை ஹானிஷ் அகமதுவை, காஜாமைதீன் அழைத்துச் சென்றார். அதன் பிறகு அவரோ, அவரது மனைவி தஹ்ரித் நிஷாவோ குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை. தஹ்ரித்நிஷாவின் பெற்றோரும் சென்னை சென்று தேடி பார்த்தனர். அங்கு அவர்கள் இல்லை. பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கும் சென்று தேடிய ேபாதும், எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தஹ்ரித் நிஷாவின் தந்தை மைதீன்பாட்சா (50), புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் மாயமான 3 பேர் குறித்து துப்புத் துலங்கவில்லை.....

போட்டோ - http://v.duta.us/FNG8awAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/Ia1aDwAA