[tamil-nadu] - உயிலட்டி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு

ஊட்டி: கோத்தகிரி அருகேயுள்ள உயிலட்டி நீர் வீழ்ச்சி மற்றும் ஆற்றில் தண்ணீர் இல்லாததால், மசக்கல் மற்றும் கூக்கல்துரை பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோத்தகிரி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ேதயிலை தோட்டங்கள் வைத்துள்ளனர். சிலர் மட்டுமே மலை காய்கறி விவசாயம் செய்கின்றனர். அதேசமயம் கோத்தகிரி அருகேயுள்ள கூக்கல்துரை, மசக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மலை காய்கறி விவசாயம் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக உயிலட்டி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் வரும் தண்ணீரை கொண்டே அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு குறித்த சமயத்தில் தென்மேற்கு பருவமழை பெய்தது.

ஆனால், வடகிழக்கு பருவமழை பொய்த்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர், நிலைகள் வற்றியுள்ளன. குறிப்பாக கோத்தகிரி அருகேயுள்ள உயிலட்டி ஆறு மற்றும் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாததால், ஆற்றை நம்பி விவசாயம் செய்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாத நிலையில், இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் இன்றி பாறைகள் மட்டுமே காட்சியளிக்கிறது.

போட்டோ - http://v.duta.us/O_4IBQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/cVhTpwAA