[tamil-nadu] - எமரால்டு அணையில் நீர் மட்டம் 74 அடியாக சரிவு

மஞ்சூர்: குந்தா, கெத்தை மின்நிலையங்களில் மின்சார உற்பத்திகாக தண்ணீர் எடுக்கப்படுவதால் எமரால்டு அணையில் நீர் மட்டம் 74 அடியாக குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட ஏராளமான அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் 12மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு அணையின் மூலம் குந்தா மின்நிலையத்தில் 60 மெகாவாட், கெத்தை மின்நிலையத்தில் 150 மெகாவாட், பரளி மின்நிலையத்தில் 180 மெகாவாட் என மொத்தம் 390 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

எமரால்டு அணையின் மொத்த கொள்ளளவு 184 அடிகளாகும். இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஓரளவு மழை பெய்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மழை அறவே பெய்யவில்லை. இதனால், எமரால்டு பகுதியை சுற்றிலும் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. சிற்றாறுகள் அனைத்தும் வறண்டு போனதால் அணைக்கு நீர்வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அணையில் உள்ள தண்ணீரின் இருப்பு பெருமளவு குறைந்துள்ளது. இருப்பில் உள்ள தண்ணீரின் மூலம் அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட மின்நிலையங்களில் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் அணையின் நீர் இருப்பு மேலும் குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி எமரால்டு அணையில் நீர் மட்டம் 184 அடியில் இருந்து 74 அடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ - http://v.duta.us/XhAv6gAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/iJaL-AAA