[tamil-nadu] - கோடை சீசன் துவங்கியதால் விடுதிகளில் கட்டணம் உயர்வு

ஊட்டி: ஊட்டியில் சீசன் துவங்கிய நிலையில் சில ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை காலங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் விரும்பி செல்கின்றனர். இப்பகுதிகளுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்லும் நிலையில், அங்கு உள்ள லாட்ஜ் மற்றும் ஓட்டல் அறை கட்டணங்கள் சீசன், இரண்டாம் சீசன் மற்றும் சாதாரண சீசன் என மூன்று வகையாக பிரித்து உயர்த்துகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களும் அனுமதிக்கின்றன.

இந்த கட்டணம் சாதாரண நாட்களை காட்டிலும் சீசன் சமயங்களில் சற்று கூடுதலாக வசூலிக்கப்படும். ஆனால், ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ் மற்றும் லாட்ஜ்களில் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த மாதம் ஒரு அறைக்கு ரூ.600 முதல் 800 வரை வாங்கிய லட்ஜ்களில் தற்போது ஆயிரத்திற்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கமிஷனுக்காக, சில சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ மற்றும் டேக்சி டிரைவர்கள் காட்டேஜ்களுக்கு அழைத்து சென்று அறைகளை எடுத்து தருகின்றனர். இதில், காட்டேஜ் மற்றும் வாடகை வீடு எடுத்து கொடுப்பவர்களுக்கு ‘கமிஷன்’ என சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கின்றனர்....

போட்டோ - http://v.duta.us/zDencgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/by6m_wAA