[tamil-nadu] - கார்சிலி சாலையில் காட்டெருமை உலா : வாகன ஓட்டுனா்கள் அச்சம்

ஊட்டி: கோத்தகிரி காம்பாய் கடை கார்சிலி சாலையில் நேற்று காலை காட்டெருமைகள் உலா வந்தன. இதனை கண்டு மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வனத்துறையினருக்கு வந்தனர். ஆனால், காட்டெருமை அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்துவிட்டது. நீலகிரி மாவட்டத்தில் காட்டெருமை மட்டுமின்றி, வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குன்னூர் பகுதியில் பகல் நேரங்களில் சாலையில் சுற்றிதிரியும் காட்டெருமையால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகரி மாவட்டம் 65 சதவிகிதம் வனப்பகுதியினை கொண்டுள்ள மாவட்டமாக உள்ளது.

இங்கு யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது வறட்சி காலம் என்பதால், அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. குடியிருப்பு பகுதியில் நுழைவதால், மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. குன்னூர் அருகேயுள்ள காட்டேரிடேம் பகுதியில் பகல் நேரங்களில் சாலையில் சுற்றிதிரியும் காட்டெருமையால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சம் அடைந்து வருகின்றனர். அப்பகுதியில் தண்ணீர் உள்ளதால் காட்டெருமை அப்பகுதியிலேயே சுற்றி திரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலக்கம்பை பகுதியில் காட்டெருமை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். எனவே பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

போட்டோ - http://v.duta.us/V8Ng1QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/djWXvgEA