[tamil-nadu] - கோவை தொகுதியில் போட்டியிடும் 4 கோடீஸ்வர வேட்பாளர்கள் முதலிடத்தில் மக்கள் நீதி மய்யம்

கோவை: மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களில் 4 பேர் கோடீஸ்வரர்கள். இதில் முதலிடத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.70.36 கோடி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18ம் தேதி நடக்கிறது. கோவை மக்களவை தொகுதியில் 14 பேர் அதிகாரபூர்வமான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணி சார்பில் மா.கம்யூ., வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், அதிமுக கூட்டணி சார்பில் பா.ஜ., வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், அமமுக சார்பில் என்.ஆர்.அப்பாதுரை, மக்கள் நீதி மய்யம் சார்பில் ரா.மகேந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ச.கல்யாணசுந்தரம், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ப.கோவிந்தன், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் பு.மணிகண்டன் ஆகிய பதிவு பெற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் போட்டியிடுகிறார்கள். சுயேட்சைகளாக கோ.கனகசபாபதி, வெ.கிருஷ்ணன், மோ.தனபால், எ.நடராஜன், வீ.புஷ்பானந்தம், பே.ராதாகிருஷ்ணன், யு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில் பதிவு பெற்ற 7 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களில் 3 பேர் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் என 4 பேர் கோடீஸ்வரர்கள் என்பது அவர்கள் தாக்கல் செய்த சொத்து பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது. இதில் முதலிடத்தில் உள்ளவர் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மகேந்திரன். இவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.70.36 கோடியாக உள்ளது. இவருக்கு அடுத்த நிலையில் பா.ஜ. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளார். அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.57.9 கோடியாகும். அமமுக வேட்பாளர் அப்பாதுரையின் சொத்து மதிப்பு ரூ.5.26 கோடியாகவும், சுயேட்சையாக ேபாட்டியிடும் வெ.கிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.1.58 கோடியாகவும் உள்ளது. மிக குறைந்த சொத்து மதிப்பு உடையவராக தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் மணிகண்டன் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.67 ஆயிரம்....

போட்டோ - http://v.duta.us/ZE4jvAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/JsCeFgAA