[tamil-nadu] - தண்ணீர் தேவை அதிகரிப்பால் டேங்குகளுக்கு நல்ல கிராக்கி : இரவு, பகலாக நடக்குது பணி

பட்டிவீரன்பட்டி: தண்ணீர் தேவை அதிகரிப்பால் பட்டிவீரன்பட்டி அருகே டிராக்டர் டேங்குகள் தயாரிக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு, நெல்லூர், ரெங்கராஜபுரம் காலனி, கதிர்நாயக்கன்பட்டி, தேவரப்பன்பட்டி, விஜோபாஜி நகர், சின்ன கவுண்டன்பட்டி, அய்யன்கோட்டை, புதூர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. இப்பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் போடப்பட்ட 70 சதவீத ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் முற்றிலும் வற்றிவிட்டது. இதனால் 20 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு 5 குடம் வீதம் தண்ணீர் விநியோகம் நடந்து வருகிறது.

மேலும் தேவையை சமாளிக்க ஒரு குடம் தண்ணீர் ரூ.5க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். வீடுகளில் போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளும் போதிய தண்ணீர் வராததால் டிராக்டர் தண்ணீரை தொட்டிகளில் நிரப்பி வருகின்றனர். 6 ஆயிரம் கொள்ளளவு கொண்ட தண்ணீர் ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் கொண்டு வர பயன்படும் டிராக்டர் டேங்குகள் தயாரிப்பிற்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த டேங்குகள் செய்யும் பணி பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள வாடிப்பட்டி பகுதி ஒர்க்‌ஷாப்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது....

போட்டோ - http://v.duta.us/VDUnrAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/RAP1PAAA