[tamil-nadu] - தருவைகுளத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் தவிப்பு

குளத்தூர்: தருவைகுளம் மீனவ கிராமத்தில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகிப்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த தவிப்புக்குள்ளாகி உள்ளனர். குளத்தூரையடுத்த தருவைகுளம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மற்றும் உப்பளத்தொழிலாளர்கள் என சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு தேவையான குடிநீருக்கு அருகிலுள்ள அனந்தமடம் பச்சேரி கிராமத்திலுள்ள கண்மாயில் போர்வெல் அமைத்து அங்கிருந்து பைப்லைன் மூலமாக தருவைகுளம் பகுதிகளுக்கு குடிதண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் அந்த குடிநீர் உபயோகிக்க முடியாமல் கடல் நீர் போல் உள்ளது. மேலும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வரும் சீவலப்பேரி கூட்டு திட்ட குடிநீர் மூன்று குடம் அல்லது 2 குடம், சிலருக்கு அதுவும் இல்லாமல் வெறுங்குடமே மிஞ்சுகிறது.

தற்போது கோடை வெயில் துவங்கிய நிலையில் குடிநீர் பஞ்சம் இப்பகுதியை வாட்டி வதைக்கிறது. இதனால் இப்பகுதி சிறுவர்கள் தண்ணீருக்காக தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையோரம் உடைப்பு ஏற்பட்டுள்ள பைப்பிலிருந்து வரும் குடிநீரை குடங்களில் சேமிக்க வெயிலில் காத்திருப்பது அப்பகுதியினரை வேதனை அடையச் செய்துள்ளது. இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக சீரான முறையில் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: ‘தருவைகுளம் கிராமம் கடலோர கிராமம் என்பதால் எங்கள் பகுதி மக்களின் குடிதண்ணீர் தேவைக்கு அருகிலுள்ள அனந்தமடம்பச்சேரி கிராமத்திலிருந்து வரும் தண்ணீரைதான் பருகிவந்தோம்....

போட்டோ - http://v.duta.us/b8ePqAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/GCmWaQAA