[tamil-nadu] - நிரந்தர செயற்பொறியாளர் இல்லாத பெரியாறு அணை : பதவியேற்ற ஒரு மாதத்தில் பணி ஓய்வு

கூடலூர்: பெரியாறு அணையில் நிரந்தர செயற்பொறியாளர் நியமிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், கடந்த மாதம் பதவியேற்ற அதிகாரி, ஒரு மாதத்தில் பணிஓய்வு பெற்றார். இதனால் பெரியாறு அணைக்கு மீண்டும் செயற்பொறியாளர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு, கம்பத்தில் பெரியாறு அணை சிறப்பு கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு பணியிலுள்ள செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் இருவரும் பெரியாறு அணை துணை கண்காணிப்புக்குழுவில் தமிழக பிரதிநிதியாக உள்ளனர். பெரியாறு அணை செயற்பொறியாளராக இருந்த மாதவன், 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். அன்று முதல் பெரியாறு வைகை வடிநிலக்கோட்டம் மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி, கூடுதல் பொறுப்பாக பெரியாறு அணை செயற்பொறியாளராகவும், சாம் இர்வின் உதவி செயற்பொறியாளராகவும், துணைக்குழுவில் தமிழக பிரதிநிதிகளாகவும் இருந்தனர்.

உச்சநீதிமன்றம் நியமித்த, கண்காணிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி, பெரியாறு அணையில் பேபி அணைய பலப்படுத்துவது, வல்லக்கடவு வழியாக பாதை அமைத்தல், பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டுவருதல், பல ஆண்டுகளாக தேக்கடியில் இயக்கமுடியாமல் இருக்கும் தமிழக பொதுப்பணித்துறையின் தமிழ் அன்னை’ படகுக்கு அனுமதி பெறுதல் போன்ற பணிகள் எதுவும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. கூடுதல் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் எந்த ஒரு வேலையையும் சிரத்தை எடுத்து செய்வதும் இல்லை என்றும், துணைக்குழு ஆலோசனைக்கூட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்தி சொல்வது இல்லை என்றும், எனவே பெரியாறு அணையின் கூடுதல் பொறுப்பு அதிகாரிகளை தவிர்த்து நிரந்தரமாக செயற்பொறியாளரை பணியில் அமர்த்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்....

போட்டோ - http://v.duta.us/piB5MgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/9if3RQAA