[tamil-nadu] - வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 இளநீர் அபிஷேகம்

கன்னியாகுமரி: கோடை வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் நேற்று 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும். தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோயிலை கட்டி உள்ளார். இந்த கோயிலில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5 1/2 அடி உயர சிவலிங்கம் மூலஸ்தானத்தில் அமைந்து உள்ளது. குகன் என்ற முருககடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை இங்கு பிரதிஷ்டை செய்ததால் இந்த கோயிலுக்கு குகநாதீஸ்வரர் கோயில் என்று பெயர் வரக்காரணமாயிற்று.

இவ்வாறு புகழ் பெற்ற கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் கோடை வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி 1008 இளநீர் அபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், நிர்மால்ய பூஜையும் நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயில் பக்தர்கள் பேரவை தலைவர் கோபி தலைமையில் பக்தர்கள் செய்து உள்ளனர்.

போட்டோ - http://v.duta.us/jBkX1wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/mDv2kgAA