[tamil-nadu] - 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு: தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை

கோவை: வரும் மக்களவை தேர்தலில் தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலின் போது நூறு சதவீத வாக்குப்பதிவை அடைய தேர்தல் ஆணையம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக தேர்தல் நாளின் போது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள் முதல் அனைத்து ஊழியர்களும் ஓட்டு போட தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 108 ஆம்புலன்ஸ் வண்டி 950 உள்ளன. இதில், பைலட், மருத்துவ டெக்னிசீயன் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தேர்தல் நாளின் போதும் பணியில் ஈடுபடுகின்றனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 32 ஆம்புலன்ஸ் உள்ளது. இதில், ஊழியர்கள் 150 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 10க்கும் குறைவானவர்களே கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இதனால், இவர்களால் பணி முடிந்து சென்று ஓட்டு போட முடியாத நிலை உள்ளது....

போட்டோ - http://v.duta.us/wV7InAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/0dXOewAA