[tamil-nadu] - கோடை வெயில் தாக்கத்தால் இலைகள் உதிர்ந்த சாலையோர மரங்கள்

டெல்டா மாவட்டங்களில் சித்திரை மாதம் கோடை வெயில் உக்கிரமாக உள்ளது. பொதுமக்கள், குழந்தைகள், நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். கோடை வெயில் வெப்பத்தின் காரணமாக சாலையோர மரங்கள் குட்டையாக காட்சியளிக்கிறது. வெயில் தாக்கத்தால் சாலைகள் இலைகளை உதிர்த்து பரிதாபமாக காட்சியளிக்கிறது. மேலும், கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க இயற்கை உணவான நுங்கு இன்னும் முழுமையாக வியாபாரத்திற்கு வரவில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர் முருகன் கூறும்போது, கோடை வெயிலின் தாக்கம் இப்பகுதியில் மிக அதிகமாக உள்ளது. காவிரி ஆற்றி லும் தண்ணீர் இல்லாத நிலையில் அனல் காற்று வீசுகிறது. வீட்டிற்குள் மின்விசிறி போட்டு இருந்தாலும் கூட அனல் காற்று வீசுகிறது. இயற்கை உணவான கோடை வெயிலுக்கு ஏற்ற பனைமரத்தின் நொங்கு வியாபாரம் இப்பொழுதுதான் விற்பனை க்கு வந்துள்ளது. பனைமரங்கள் பெருமளவு அழிந்து போனதால் நுங்கு விற்பனை இல்லாமல் உள்ளது என்றார்.

நுங்கு விற்பனை வியாபாரி அண்ணாதுரை கூறும்போது, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் பனைமரங்கள் பெருமளவு காய்ந்து போனது. மேலும் செங்கல் சூளை மற்றும் இதர பயன்பாட்டிற்கு பனை மரங்களை பெருமளவு வெட்டி அழித்து விட்டதாலும், நுங்கு தட்டுப்பாடு நிலவுகிறது. காவிரி கரையோர ஆற்றுப் படுகையில் முன்பெல்லாம் பெருமளவு பனைமரங்கள் இருக்கும்....

போட்டோ - http://v.duta.us/LVXdbQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/fPkAUgAA