[tamil-nadu] - முத்துப்பேட்டையில் மெகா சைஸ் பப்பாளி பழம் கிலோ ரூ.30க்கு விற்பனை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சில தினங்களாக 4 கிலோ எடை வரை உள்ள பப்பாளி பழம் வியாபாரம் வெயிலை போன்று சூடு பிடித்துள்ளது. 1 கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தற்போது பப்பாளி பழம் விற்பனை சூடு பிடித்துள்ளது. டெல்டாவை புரட்டிபோட்ட கஜா புயலால் ஒரு பப்பாளி மரத்தை கூட பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் இப்பகுதிக்கு வரும் பப்பாளி பழங்கள் சுற்று பகுதியிலிருந்து மதுரை மார்க்கெட்டுக்கு வந்து பின்னர் முத்துப்பேட்டை பகுதிக்கு வருகிறது. ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படும் பப்பாளி பழம் சிறிதாக இருந்தால் ஒரு கிலோவிற்கு மேல் உள்ளது. பெரிய பப்பாளி பழம் 4 கிலோ வரை எடை கொண்டுள்ளது. இதனை மக்களும் ஆர்வத்துடன் பேரம் பேசாமல் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே பப்பாளி பழம் விற்பனை செய்து வரும் பாலகுமார் கூறுகையில், பப்பாளி மரங்கள் கண்ட இடங்களில் முளைத்து வளரக்கூடிய மரம் என்பதால் இதன் அருமையை தெரியாமலே மரத்தை வளர்க்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை அப்படியே இருந்தாலும் அடியோடு வெட்டி வீசி வந்தனர். இப்படி பப்பாளி மரங்களை பலரும் வெட்டி அழித்து வந்ததால் தற்போது பப்பாளி பழம் வரத்து குறைந்து உள்ளது....

போட்டோ - http://v.duta.us/ZObeiQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/lZqlZwAA