[tamil-nadu] - அலட்சியம் காட்டும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உயிர்களை பலி வாங்கும் அபாயகர தொழிற்சாலைகள்

திருப்பூர்: திருப்பூரில் அபாயகர தொழிற்சாலைகளில் உயிர்ப்பலி தொடர்கிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம் காட்டுகிறது. தமிழகத்தில் தொழில்வளம் நிறைந்த நகரமாக திருப்பூர் விளங்கி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இங்கு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுடன் பஞ்சாலைகள், கொப்பரை களங்கள், சாய ஆலைகள், கட்டுமான நிறுவனங்கள், மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகள், காற்றாலை அமைக்கும் பணிகள், கறிக்கோழி பண்ணை, அரிசி அரவை ஆலைகள், ஹோட்டல், தங்கும் விடுதி என பல நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில், தமிழகம் மட்டுமின்றி, வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். இவர்களில் 4 லட்சம் வடமாநில தொழிலாளர்களும் அடங்குவர். இந்நிறுவனங்களில், தற்போது உள்ளாட்சி அமைப்புகள் சுகாதாரப்பணிகள் செய்ய தனியார் நிறுவனங்களை அனுமதித்துள்ளது. இதற்காக, அரசு அலுவலங்கள், திருப்பூர் மாநகராட்சியில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாய சலவை பட்டறைகள், பிளீச்சிங், பிரிண்டிங், ஸ்டீம் காலரிங், இரும்பு உருக்கு ஆலைகள், கெமிக்கல் நிறுவனங்கள் உட்பட அபாயகரமான தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்களையே அதிகளவில் வேலைக்கு வைத்துள்ளனர்.. கழிவுநீர் தொட்டி, சாயக்கழிவுநீர் தொட்டி உள்பட விஷவாயு உற்பத்தியாகும் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலில் இவர்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. கடந்த 2013-ம் ஆண்டு, மலம் மற்றும் கழிவுகளை இயந்திரம் கொண்டுதான் அகற்றப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை பெரும்பாலான தொழிற்சாலைகள் பின்பற்றுவதில்லை. திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார் சாயசலவை பட்டறையின் கழிவுநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் கடந்த 14ம்தேதி (ஞாயிறு) விஷவாயு தாக்கி இறந்தனர்....

போட்டோ - http://v.duta.us/-dzUGAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/DrEmQQAA