[tamil-nadu] - தண்ணீர் வராததால் பூண்டி ஏரி வறண்டது சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் இங்கிருந்து சென்னை மக்களின் குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது, இதனால் ஏரி வறண்டு கிடக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. நேற்று காலை 9 மணி நிலவரப்படி 19 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் கால்வாயும் வறண்டு வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், “பூண்டி ஏரியில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இருக்கும் தண்ணீரை வைத்து சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிப்பது மிகவும் கடினம்” என்றார்.தமிழக, ஆந்திர அரசுக்கு இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு ஆந்திரா வழங்க வேண்டும். இந்த தண்ணீர் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் வினாடிக்கு 1000 கன அடிக்கு மிகாமல் அக்டோபர் மாதம் வரை தரவேண்டும். அதன்பின் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வினாடிக்கு 1000 கன அடிவீதம் திறந்து விடவேண்டும்....

போட்டோ - http://v.duta.us/7ucH8wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/5vdRbgAA