[tamil-nadu] - தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை திறப்பு விழா காணாமல் முடங்கிய கழிப்பிடங்கள்: தவிக்கும் மலைவாழ் மக்கள்

கோவை: கோவை பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் திறப்பு விழா காணாமல் முடங்கி கிடக்கிறது. இதனால், மலைவாழ் மக்கள் தவிக்கின்றனர்.கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. குறிப்பாக, பொள்ளாச்சியில் 17-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமம், வால்பாறையில் 17-க்கும் மேற்பட்ட கிராமம் வனப்பகுதிக்குள் உள்ளன. இதுபோன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிட வசதி செய்துகொடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் இவை கட்டப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் பாசன வாய்க்காலை ஒட்டி இருக்கும் அன்பு நகரில் 400-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லாமல், பொது இடங்களிலேயே மலம் கழிக்கின்றனர். இப்பகுதியில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால், திறந்தவெளியில் மலம் கழிக்க செல்லும்போது பாம்பு கடிக்கு ஆளாகின்றனர்.இதேபோல், ஆழியார் அணைக்கு அருகே, வால்பாறை சாலையை ஒட்டி இருக்கும் சின்னார்பதி மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இங்கு, விஷ பாம்பு மட்டுமின்றி, யானை, காட்டுப்பன்றி போன்ற மிருகங்களாலும் தாக்கப்படுகின்றனர். இப்பகுதியிலும் மின்சார வசதி இல்லை. இப்பகுதி மக்களின் சிரமத்தை உணர்ந்து, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், திறப்பு விழா காணாமல் முடங்கி கிடக்கிறது....

போட்டோ - http://v.duta.us/HfrPdQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/59KDdAAA