[tamil-nadu] - மிரட்டிய எஸ்ஐ; மிரள வைத்த மக்கள்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள பட்டம்புதூர் மீனாட்சிபுரம் பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, வாக்குப்பதிவு நடந்த கடந்த 18ம் தேதி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்த வாக்காளர்களும் ஒன்று திரண்டு நின்றபடி, ‘‘எத்தனையோ மனுக்கள் போட்டும் ஏன்னு கேக்கல... இப்பவாவது கட்டாயம் செய்றோம்னு எழுதி கையெழுத்து போட்டுத்தாங்க.. அப்போதான் ஓட்டுப்போடுவோம்’’ என்று கறாராக கூறி விட்டனர்.

அப்போது சமரசம் செய்ய வந்த ‘ரா’வில் பெயர் துவங்கும் எஸ்ஐ ஒருவர் தோரணையாக, ‘‘ஒழுங்கா ஓட்டைப் போட்டுட்டு வீட்டுக்குப் போங்க... இந்த கூட்டம் கூட்டுற வேலையெல்லாம் இங்கே வேணாம்...’’ என மிரட்டலாகக் கூற மக்கள் வெகுண்டெழுந்தனர். ‘‘நாங்களும் அதைத்தான் கேட்கிறோம்... ஓட்டுச்சாவடிக்குத் தூரமா நின்று, எங்க உரிமையைக் கேட்க வந்திருக்கோம்... உங்களை யாரு இங்கே கூப்பிட்டது’’ என்றபடி எதிர்க்க, அங்கே பெரும் மோதல் சூழ்நிலை வந்தது. இதனை கண்டு சிவத்தில் பெயர் துவங்கும் ஏஎஸ்பி ஓடி வந்து, ‘‘உணர்வுப்பூர்வமா கூடியிருக்குற கூட்டத்துல, நம்மோட மிரட்டல் வேகாதுப்பா. பார்த்து பக்குவமா பேசு... வேகத்தை விடு. வேண்டுதலாய்தான் கேட்கணும்’’ என்று அட்வைஸ் பண்ணி சென்றாராம்... அதன் பிறகு சமாதானமாய் பேசி மக்களை ஓட்டு போட வச்சாங்களாம்....

போட்டோ - http://v.duta.us/uYM9WwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/zP_QtwAA